WATER FROM THE RAIN! - மழைத் தண்ணீர்! :- Daily Devotions
"நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும், பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்" (உபா. 11:11).
எப்பொழுதுமே, உங்களை "சுதந்தரவாளிகள்" என்று, நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கிறிஸ்துவுடையவர்கள். ஆபிரகாமின் சந்ததியாரும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரவாளியுமாயிருக்கிறீர்கள். வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசத்தை, நீங்கள் சுதந்தரிப்பீர்கள். இது, "பரிசுத்த ஆவியின் பின்மாரி" ஆகும்.
தேவ ஜனங்கள், பரிசுத்த ஆவிக்காக வாஞ்சிக்க வேண்டும். தாகத்தோடு பெற்றுக் கொள்கிறவர்களாகவுமிருக்க வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிற, அந்த பின் மாரியின் மழையினால், வறண்ட நிலங்கள் செழிப்படைய முடியும். நீங்களும், பரிசுத்த ஆவியானவரைப் பருகி, திருப்தியடைய வேண்டும்.
உங்களுடைய உள்ளமானது, வானத்தின் மழைத் தண்ணீருக்காக ஏங்குகிறதா? அதைக் குடித்து மகிழுகிறீர்களா? இன்றைக்கு, அநேகர் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படாமல், காய்ந்து, வறண்டு போன நிலத்தைப்போல இருக்கிறார்கள். கர்த்தர், இந்த வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும்படி, உங்களை அன்போடு அழைக்கிறார். "ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண் டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி, விலையுமின்றித் திராட்சரசமும், பாலும் கொள்ளுங் கள்" (ஏசா. 55:1).
கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? "நான் அவர்களையும், என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்" (எசேக். 34:26). வறண்ட நிலத்திற்கு, வான்மழை எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! வாடிப்போன உள்ளங்களுக்கு, அபிஷேக மழையினால், எத்தனை புத்துணர்ச்சி!
இந்த பின்மாரியின் மழை, உங்களுடைய வாழ்க்கையிலே பொழியப்பட, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பிரசங்கி சொல்லுகிறார், "மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்" (பிர.11:3). உங்களுடைய உள்ளத்தில் ஜெபஆவி நிரம்பியிருந்தால், அபிஷேக மழை, நிச்சயமாகவே பொழியும். உங்களுடைய உள்ளத்தில் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நிரம்பியிருந்தால், ஆவியின் வரங்கள் பொழியப்படும். உங்கள் ஆத்துமாவில் விசுவாசமிருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது கொடுக்கப்படும்.
இந்த விஞ்ஞான யுகத்துக்கு, எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த யோபு பக்தன், மழை பெய்யும் இரகசியத்தை எழுதினார். "அவர் நீர்த் துளிகளை, அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள், மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது" (யோபு 36:27). நீர்த்துளிகள், அணுவைப்போல ஏறுகிறது. இது, உங்களுடைய ஜெபம், பரலோகத்தை நோக்கி ஏறுவதைக் காண்பிக்கிறது. அது கர்த்தருடைய உள்ளத்தை களிகூரப்பண்ணி, உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாத மழையாக, அபிஷேக மழையாக பொழியச் செய்கிறது.
பரிசுத்தத்தின் நிறைவு, ஏதோ ஒரு சிலருக்குக் கொடுக்கப்படுகிற அனுபவமல்ல. நீங்கள் வாஞ்சையோடு கேட்பீர்களென்றால், கர்த்தர், அந்த அபிஷேக சுதந்தரத்தை உங்களுக்கும் தந்தருளுவார். கிறிஸ்து என்ற "அபிஷேக நாதர்" பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும், உங்களை அபிஷேகம் பண்ணுவார்.
நினைவிற்கு:- "விதைப்பு சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும். வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியான வர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்" (சகரியா 8:12).
=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========
“....but the land which you cross over to possess is a land of hills and valleys, which drinks water from the rain of heaven” (Deuteronomy 11:11).
Always think of yourself as the heir. You belong to Christ. You are Abraham’s seeds and heirs according to the promise. You will inherit the nation from which you can drink the rainwater from the High. This is the latter rain of the Holy Spirit.
The divine people should long for the Holy Spirit. The dry land can become fertile because of that latter rain which comes from the High. You also have to be satisfied by drinking the Holy Spirit.
Do your heart long for the rainwater from the High? Do you drink it and rejoice? Today, many people remain as dry lands being not filled by the Holy Spirit. God calls you with love to drink this rainwater from the High. “Ho! Everyone who thirsts, come to the waters and you who have no money, come, buy and eat. Yes, come, buy wine and milk without money and without price” (Isaiah 55:1).
What is the promise of God? “I will make them and the places all around my hill a blessing, and I will cause showers to come down in their season; there shall be showers of blessing” (Ezekiel 34:26). What a big blessing the rainwater is to the dry land! What a refreshment the rain of anointment is for the fallen hearts!
What should you do for this latter rain to pour into your life? The Ecclesiastes says, “If the clouds are full of rain, they empty themselves upon the earth” (Ecclesiastes 11:3). The rain of anointment will definitely pour if your heart is filled with the Spirit of prayer. The gifts of the Spirit will flow on you if your heart is filled with the promises of God. If you have faith in your soul, all you seek will be given to you.
Even before thousands of years from this scientific era, the saint Job wrote the secret of how it rains. “For He draws up drops of water, which distil as rain from the mist” (Job 36:27). The drops of water ascend like atom and this shows how your prayer reaches the heaven. Your prayer makes the heart of God rejoice and thus the rain of anointment and the rain of blessings pour into your life.
The fullness of holy is not an experience given to certain people alone. God will graciously give that inheritance of anointment to you also if you seek the same with zeal. Christ the anointer will anoint you with Holy Spirit and fire.
To meditate: “For the seed shall be prosperous, The vine shall give its fruit, The ground shall give her increase and the heavens shall give their dew- I will cause the remnant of this people to possess all these” (Zechariah 8:12).
WATER FROM THE RAIN! - மழைத் தண்ணீர்! :- Daily Devotions
Reviewed by Christking
on
August 04, 2018
Rating: