POSSIBLE TO GOD! - தேவனால் முடியும்! :- Daily Devotions
"மலடியென்னப்பட்ட அவளுக்கு (எலிசபெத்துக்கு) இது ஆறாம் மாதம். தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்" (லூக். 1:36,37).
"தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை" என்பதை, பசுமரத்தாணி போல, உங்கள் உள்ளத்தில், மனதில் பதிக்க விரும்புகிறேன். உளிவெட்டாய் உங்கள் நினைவில், செதுக்க விரும்புகிறேன். ஆம், கர்த்தர், சர்வ வல்லமையுள்ள தேவன். அவரால் கூடாத, அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
பாருங்கள்! ஆதாமை எந்த தாயும், தகப்பனுமின்றி தோன்றச் செய்தார். அவருக்கு மாமியாரும் இருந்ததில்லை. மாமனாரோ, நாத்தனாரோ இருந்ததுமில்லை. தாயின் வயிற்றிலிருந்துதான், குழந்தை பிறக்க வேண்டும் என்கிற இயற்கை விதி, கர்த்தருக்கு முன்பாக ஒன்றுமில்லை. கர்த்தர் மெல்கிசேதேக்கை, தாயும், தகப்பனுமின்றி, துவக்கமும், முடிவுமின்றி அற்புதமாய் தோன்றச் செய்தார். சாலேமை ஆண்ட ராஜாவாயிருந்தபோதிலும், அவர், பரிசுத்த ஆவியானவருக்கு நிழலாட்டமானவர். தேவ குமாரனாகிய இயேசுவுக்கு ஒப்பானவர் (எபி. 7:1-3). ஏவாளைக் கர்த்தர், ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கினார்.
சாராளுக்கு 90 வயதாகி விட்டது. பெண்களுக்குரிய வழிபாடு நின்று போயிற்று. ஆபிரகாமின் சரீரமும் செத்துப்போனது. ஆனாலும், கர்த்தர் அற்புதமாக சாராளுக்கு, "ஈசாக்கு" என்ற மகனைக் கொடுத்தார். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.
புதிய ஏற்பாட்டிலே, சகரியாவின் மனைவியான எலிசபெத்துக்கு, முதிர் வயதானது. அதை ஞாபகப்படுத்தி, தேவதூதன் மரியாளைப் பார்த்து, "அவள் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனை கர்ப்பந்தரித்திருக்கிறாள். மலடி என்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம்" என்றான். தேவனாலே கூடாத காரியம் ஒன்று மில்லை. ஆகவே, மரியாளுக்கு தேவதூதன் சொன்ன சத்தியம் இதுதான். நீ, கணவன் இல்லாமலே, கருதரிக்கப்போகிறாய். உன்னதமானவருடைய பெலன் உன்மேல் நிழலிடும். உன்னிடத்தில் உற்பவித்தது, பரிசுத்தமுள்ளது என்றான்.
வேதத்தில் பல இடங்களில், கர்த்தர் அற்புதம் செய்ததையெல்லாம் வாசிக்கும் போது, என் வாழ்க்கையிலும் அற்புதம் செய்வார், என் குடும்பத்திலும் அற்புதம் செய்வார், அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயமான நிலைமையிலே, எனக்குள்ளே கிரியை செய்ய வல்லவர் என்பதை, நினைத்துக்கொள்ளுங்கள். இது மனுஷனால் கூடாததுதான். தேவனால், எல்லாம் கூடும் (மத். 19:26).
இயேசுவிடம் ஒரு தகப்பன், ஊமையான ஒரு ஆவி பிடித்த, தன் மகனை கொண்டு வந்தான். அது, அவனை எங்கே பிடித்தாலும், அவனை அலைக்கழித்தது. சீஷர்களால் அதைத் துரத்தக் கூடாமற்போயிற்று. "நீர் எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான்" (மாற். 9:22).
இயேசு அவனை நோக்கி: "நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிற வனுக்கு, எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன், விசுவாசிக் கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும், என்று, கண்ணீ ரோடே சத்தமிட்டுச் சொன்னான்" (மாற். 9:23,24). அதைக் கேட்ட இயேசு மனதுருகி னார். தகப்பனால் துரத்த முடியாமலிருந்தாலும், சீஷர்களால் துரத்த முடியாமலிருந் தாலும், நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மட்டுமல்ல, "ஊமையும், செவிடுமான ஆவியே, இவனை விட்டு புறப்பட்டுபோ" என்று சொன்னபோது, அது அவனை விட்டுப் புறப்பட்டுப் போனது.
நினைவிற்கு:- "மனுஷரால் இது கூடாததுதான். தேவனால் இதுகூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்" (மாற். 10:27).
=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========
“....this is now the sixth month for her (Elizabeth) who was called barren. For with God nothing will be impossible.” (Luke 1:36, 37)
I would like to fix the verse “with God nothing will be impossible” firmly on your heart. I would like to carve this verse on your heart as it is done on a rock. Yes, God is Almighty and no miracle is impossible to Him.
See! He created Adam without a father and a mother. There was no mother-in-law or a sister-in-law or a father-in-law. There is no natural binding for God that a child should take its birth only from the womb of its mother. God brought Melchizedek into existence miraculously without father, without mother, without genealogy, having neither beginning of days nor end of life (Hebrews 7:1-3). Though he was a king who ruled Salem, he was the version of the Holy Spirit and made like the Son of God. God created Eve from the bone of Adam.
Sarah attained ninety years of age and she had passed the age of childbearing. Abraham also had become too old. Even then, God miraculously gave Isaac as the son of Sarah. Nothing is impossible to God.
In the New Testament, Elizabeth, wife of Zechariah had attained old age. Reminding this, the angel told Mary, “Now indeed, Elizabeth your relative has also conceived a son in her old age; and this is now the sixth month for her who was called barren.” Nothing is impossible to God. So, this is what the promise which the angel gave Mary, “You are going to become a mother even without the husband. The power of the Highest will overshadow you; therefore, that one who is to be born in you will be Holy.”
All the miracles which God did, find a place in many instances in the Scripture. When you read these portions, think that He will do miracles in my life and in my family also. He is empowered to do certain deeds within me which are wonderful in nature and which are supernatural too. “With men this is impossible, but with God all things are possible” (Mathew 19:26).
A father brought to Jesus his son who had a mute spirit. Wherever it seized him, it threw him down. The disciples were not able to cast it out. He requested Jesus, “...if you can do anything, have compassion on us and help us” (Mark 9:22).
Christ told the father, “If you can believe, all things are possible to him who believes”. Immediately the father of the child cried out and said with tears, “Lord, I believe; help my unbelief!” (Mark 9:23-24). Hearing this, God sympathised him and said, “You may not be able to cast this evil spirit out and the disciples also may be unable to do the same but if you can believe, all things are possible to him who believes,” Further, when He told “Deaf and dumb spirit, I command you, come out of him and enter him no more!” it departed from him.
To meditate: “With men it is impossible, but not with God; for with God all things are possible” (Mark 10:27).
POSSIBLE TO GOD! - தேவனால் முடியும்! :- Daily Devotions
Reviewed by Christking
on
August 07, 2018
Rating: