LAND WHICH GOD CARES ABOUT! - விசாரிக்கிற தேசம்! :- Daily Devotions
"அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம்" (உபா. 11:12).
இந்த மாதத்தில், "நீ சுதந்தரிப்பாய்" என்று, கர்த்தர் வாக்குக்கொடுத்திருக்கிறார். "சுதந்தரிக்கப்போகிற தேசம் எப்படிப்பட்டதாயிருக்கும்?" என்பதை, கர்த்தர் உபாகமம் 11-ம் அதிகாரத்திலிருந்து, தொடர்ந்து சொல்லுகிறார். "நீ சுதந்தரிக்கப்போகிற" ஆசீர்வாதத்தில் முக்கியமானது, கர்த்தர் உங்களை அன்போடு விசாரிப்பதாகும்.
ஆம், கர்த்தர் உங்களை விசாரிப்பவர் மட்டுமல்ல. உங்களுக்காக கவலைப் படுகிறவர். உங்களுடைய மேன்மையைக் குறித்து, அக்கறைகொள்ளுகிறவர். அவர் ஏன் உங்களை விசாரிக்கிறார்? உங்களுடைய எல்லா குறைவுகளையும், தம்முடைய ஐசுவரியத்தின்படியே நிறைவாக்கும்படி, உங்களை சந்தோஷப்படுத்தும்படி விசாரிக் கிறார். கர்த்தர் உங்களை விசாரிக்காவிட்டால், நீங்கள் ஒரு அநாதையைப்போல, திக்கற்றவர்களாக, தனித்து விடப்பட்டவர்களாக கருதப்படுவீர்களல்லவா?
ஒரு இடத்தில் வெள்ளம் வந்ததென்றால், அரசாங்க மந்திரிமார் வந்து, வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களை, அன்போடு விசாரிக்கிறார்கள். வறட்சி ஏற்பட்டு விட்டால், உங்களுக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று கேட்டு, ஆவன செய்கிறார்கள். யுத்தத்தில் காயப்பட்டவர்களை, ராணுவ அதிகாரிகள் வந்து அன்போடு விசாரிக்கிறார்கள். அப்பொழுது, அவர்கள் உள்ளத்தில் உற்சாகம் ஏற்படும்.
என்னதான் அரசியல்வாதிகளும், மந்திரிகளும் விசாரித்தாலும்கூட, பாதிக்கப் பட்ட அத்தனைபேரையும், விசாரித்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஒன்றி ரண்டு பேரைப் பார்த்துவிட்டு, போட்டோ எடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். அநேகர், என்னை விசாரிக்க ஒருவருமில்லையே. யாரும் வந்து பார்க்கவில்லையே, ஆறுதலாக ஒரு வார்த்தை சொல்ல ஆளில்லையே என்று தவிக்கிறார்கள்.
நீங்கள் கர்த்தருடைய பிள்ளைகளானால், எல்லா நேரமும் கர்த்தருடைய பிரசன்னம் உங்களை அன்போடு சூழ்ந்திருக்கும். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னை கைவிடுவதுமில்லை என்று, அவர் சொல்லியிருக்கிறாரே. "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்" (1 பேது. 5:7). சங்கீதக்காரனும்கூட, "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார்" (சங். 55:22) என்கிறார்.
சரி, கர்த்தர் உங்களை எப்படி விசாரிப்பார்? "ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல், நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசா. 66:13). மட்டுமல்ல, ஒரு தகப்பனைப்போல விசாரிக்கிறார். "தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்கு கிறார்" (சங். 103:13). ஒரு சிநேகிதனோடு, முகமுகமாய்ப் பேசுவதுபோல, கர்த்தர் அன்போடு பேசி, உங்களை விசாரிக்கிறார்.
ஒருவேளை மற்றவர்கள், இனத்தவர்கள், நண்பர்கள், உங்களை "உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தண்ளுண்டவன் என்று பேரிட்டி ருக்கலாம். கர்த்தர் சொல்லுகிறார், "நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன்" (எரே. 30:17).
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை விசாரிக்கிறவர். ஆனால், நீங்கள் கர்த்தரிடத்தில் விசாரிக்கிறீர்களா? ரெபெக்காளின் வயிற்றில் இரட்டைக் குழந்தை உருவானபோது, இப்படியானால், எனக்கு எப்படியோ? என்று சொல்லி, கர்த்தரி டத்தில் விசாரிக்கும்படி போனாள் (ஆதி. 25:22). அப்பொழுது கர்த்தர் பிள்ளையைப் பற்றிய இரகசியங்களை, அவளுக்கு அன்போடு வெளிப்படுத்திக்கொடுத்தார்.
நினைவிற்கு:- "மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?" (எபி. 2:6).
=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========
“.... a land for which the Lord your God cares;” (Deuteronomy 11:12).
For this month, God has given the promise “You will inherit.” God narrates how the land to be inherited will be, from the 11th chapter of the book of Deuteronomy. God’s care over you is the most important of all the blessings which you will inherit.
God not only cares for you but He has concern over you. He is the one to show interest on your well being. Why does he care for you? He will supply all your need according to His riches in glory by Christ Jesus and cares for you to make you happy. If God does not care about you would you not be left alone like an orphan and tramp?
If a place is inundated, the ministers of the Government will inquire the affected people with concern. Similarly when a famine strikes they inquire the people about their plight and try to provide them relief. The wounded soldiers of the army are visited with love and care by the officials of the army. This act will cheer them up.
But it cannot be said that all the persons affected will be taken care of by the politicians and the ministers. They will show their concern by consoling one or two persons, take some photographs and move away. We see many such affected persons lamenting that there is no one to take care of them, no one to visit them and there is no word of concern from anybody.
If you are the children of God, the presence of God will always be surrounding you. Has He not said, “I will not leave you nor forsake you”? “....casting all your care upon Him, for He cares for you” (I Peter 5:7). The Psalmist also says, “Cast your burden on the Lord, And He shall sustain you; He shall never permit the righteous to be moved” (Psalms 55:22).
How will God comfort you? “As one whom his mother comforts, so I will comfort you, and you shall be comforted in Jerusalem” (Isaiah 66:13). Not only that. He cares like a father also. “As a father pities his children, so the Lord pities those who fear Him” (Psalms 103:13). God speaks to you face to face with love and takes care of you just as a friend does.
Maybe, the others, your people and friends might have categorised you as a rejected one saying that you are “A Zion on whom no one takes care of”. God says, “For I will restore health to you and heal you of your wounds.” (Jeremiah 30:17).
Dear children of God, the Lord is the one who cares for you. But do you inquire the Lord? When Rebecca became pregnant, she went to God to inquire “If all is well, why am I like this?” (Genesis 25:22). At that time God revealed her the secrets over the children with love.
To meditate: “What is man that you are mindful of him, or the son of man that you take care of him?” (Hebrews 2:6)
LAND WHICH GOD CARES ABOUT! - விசாரிக்கிற தேசம்! :- Daily Devotions
Reviewed by Christking
on
August 05, 2018
Rating: