Land Of Valleys! - பள்ளத்தாக்குகளுள்ள தேசம்! :- Daily Devotions - Christking - Lyrics

Land Of Valleys! - பள்ளத்தாக்குகளுள்ள தேசம்! :- Daily Devotions


"நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும், பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்" (உபா. 11:11).

நீங்கள் சுதந்தரிக்கப்போகிறீர்கள். கர்த்தர் உங்களை சுதந்தரவாளிகளாய் உயர்த்துவார். வாடகை வீட்டிலுள்ளவர்கள், சொந்த வீட்டை சுதந்தரிக்கும்போது, அது எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கும்! "பள்ளத்தாக்கு" என்பது, மனத்தாழ்மையைக் காண்பிக்கிறது. பள்ளத்தாக்கை நோக்கி ஆறுகள் ஓடிவருகிறபடியால், அங்கே அருமையான வண்டில்கள், உரங்கள் வந்து சேர்ந்து, பள்ளத்தாக்கை செழிப்புள்ள தாய் மாற்றுகிறது. விவசாயிகளுக்கு பள்ளத்தாக்கு என்றாலே கொண்டாட்டமாய் இருக்கும்.

"பள்ளத்தாக்கு" என்றால், "மனத்தாழ்மை." இயேசு சாந்தமும், மனத்தாழ்மையு முள்ளவராயிருந்தார் (மத். 11:29). அந்த மனத்தாழ்மையினாலே, அடிமையின் ரூபமெடுத்தார். தேவகுமாரனாயிருந்தாலும், மனுஷகுமாரன் என்று, தம்மையே தாழ்த்திக்கொண்டார். கிறிஸ்துவின் தாழ்மை, உங்கள் முன்மாதிரியாயிருக்கட்டும்.

ஒவ்வொருநாளும், "தேவனே, எனக்கு தாழ்மையுள்ள இருதயத்தைத் தாரும். உமக்கு முன்பாகவும், கர்த்தருடைய ஊழியர்களுக்கு முன்பாகவும், விசுவாசிகளுக்கு முன்பாகவும், மிகுந்த மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள எனக்கு உதவி செய்யும்" என்று ஜெபியுங்கள். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே, உங்களிலும் இருக்கக்கடவது" (பிலி. 2:5). நிச்சயமாகவே மனத்தாழ்மையைப் பெறுவீர்கள்.

மலையிலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு நதி, ஒருநாளும் மேட்டை நோக்கி ஏறிச் செல்வதில்லை. தாழ்ந்த பள்ளத்தாக்கை நோக்கி தான், மிக வேகமாய் ஓடி நிரப்பும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு, தாழ்மையுள்ளவர்களாயிருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு, தேவ கிருபை பரலோகத்திலிருந்து உங்களை நோக்கி வந்து, பரலோக உச்சிதங்களினால் நிரப்பும்.

தாழ்மையுள்ளவர்களைப் பாருங்கள்! அவர்கள் சாந்தகுணமுள்ளவர்களாக, தெய்வீக அன்பினாலும், இனிமையான சுபாவங்களினாலும் நிரம்பியிருப்பார்கள். தாழ்மையுள்ளவர்களிடத்தில், நல்ல ஆவியின் கனிகளைக் காணலாம். நீங்கள் ஒரு பக்கத்தில், மலைகளைப்போல உன்னதங்களில் கிறிஸ்துவோடுகூட உயர்ந்து நின்றாலும், மனத்தாழ்மையுள்ளவர்களாய் காணப்பட வேண்டும்.

இயேசு கிறிஸ்து இந்தப் பூமியிலே பிறந்து, மனுஷகுமாரனாய் ஜீவிப்பதற்கு, அவருக்கு தாயாக மரியாளைத் தெரிந்து கொண்டதின் இரகசியம் என்ன? அது மரியாளின் தாழ்மைதான். "அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப் பார்த்தார்" (லூக். 1:48). "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது" (லூக். 1:38) என்று, மரியாள் தன்னைத் தாழ்த்தி, ஒப்புக்கொடுத்தாள்.

இன்றைக்கு, உலகத்தார், பெருமையினால் தங்களைத் தாழ்த்த விரும்புவதில்லை. தங்களுடைய படிப்பு, அந்தஸ்து, ஜாதி, குலம், கோத்திரம் என்ற பெருமையோடு, தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறார்கள். சாத்தான், உன்னதத்திலிருந்து பாதாளத் துக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம், அவனுக்குள்ளிருந்த "பெருமை"யாகும். ஆனால் தாழ்மையுள்ளவர்கள் பக்கமாக கர்த்தர் நிற்கிறார். அவர்களுக்கு கிருபை யளிக்கிறார். ஐசுவரியம், மகிமை, ஜீவனைக்கொடுத்து உயர்த்துகிறார். ஆகவே, கிறிஸ்துவின் தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப் பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்" (பிலி. 2:6-8).

=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========

“....but the land which you cross over to possess is a land of hills and valleys” (Deuteronomy 11:11).

You are going to inherit. God will elevate you as the heirs. How joyous it would be when one who resides in a rental home, shifts to his own residence! The word ‘Valley’ indicates the humility. Since the rivers flow towards the valleys, the flowing water collects all the sediments and manures at the bottom and makes the valley fertile. Valley is a happy venue for the farmers.

“Valley” means humility. Jesus was gentle and was low in heart (Mathew 11:29). Through that humility, He took the form of a bonded servant. Though He was the Son of God, He lowered Himself as a son of man. Let the humility of Christ be a model to you.

Pray every day saying, “God, give me a heart of humility. Help me to behave humbly with you, your servants and the believers. “Let this mind be in you which was also in Christ Jesus” (Philippians 2:5). You will definitely receive the humility.

The river which flows down from the hill will never flow upwards and it will run fast on the slope and fill the valleys only. The divine grace from the heaven will come towards you and fill you with heavenly precious things in proportion to how humble you are.

Look at the people with humility! They will be gentle, filled with divine love and pleasant characteristics. Good fruits of the spirit can be found in people with humility. Even if on one side you are placed on the High and stand as a mountain with Christ, you should remain humble.

What is the reason behind Jesus choosing Mary as His mother to take birth in this world and live like a son of man? It is because of nothing but the humility of Mary. “For, He has regarded the lowly state of His maidservant”(Luke 1:48). Mary humbled and submitted herself saying, “Behold the maidservant of the Lord! Let it be to me according to your word” (Luke 1:38).

Today, the people of the world, who are proud, do not like to be humble. They flaunt their educational qualification, status, caste, ethnic group and ancestry, with pride. The main reason for satan to be pushed out of the High towards the hell was his pride. But God stands by the side of those who are humble. He gives them the grace. He exalts them with wealth, glory and life. So, put on the humility of Christ.

To meditate: “who, being in the form of God, did not consider it robbery to be equal with God, but made Himself of no reputation, taking the form of a bondservant, and coming in the likeness of men” (Philippians 2:6, 7).

Land Of Valleys! - பள்ளத்தாக்குகளுள்ள தேசம்! :- Daily Devotions Land Of Valleys! - பள்ளத்தாக்குகளுள்ள தேசம்! :- Daily Devotions Reviewed by Christking on August 03, 2018 Rating: 5
Powered by Blogger.