Land Of Hills! - மலைகளுள்ள தேசம்! :- Daily Devotions - Christking - Lyrics

Land Of Hills! - மலைகளுள்ள தேசம்! :- Daily Devotions


"நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும், பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்" (உபா. 11:11).

ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும், உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்களையும், நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, கர்த்தர் உங்களை அழைத்திருக்கிறார். ஆகவே நீங்கள், மற்றவர்களைப்போல, சாதாரண வாழ்க்கை வாழாமல், விசேஷமான வாழ்க்கை வாழ வேண்டும். இதற்காகவே, கர்த்தர் உங்களை இரத்தம் சிந்தி மீட்டிருக்கிறார். பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும், அபிஷேகம் பண்ணியிருக்கிறார். ஆகவே, நீங்கள் சுதந்தரவாளியாய் விளங்கும்படி, பரிசுத்தமுள்ள வெற்றி வாழ்க்கை வாழத் தீர்மானியுங்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள், சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்ட தேசமானது, மலை களுள்ள தேசம். "மலைகளும், பர்வதங்களும், சிகரங்களும்," உன்னதமான ஜெப ஜீவியத்தைக் காண்பிக்கிறது. உலகத்தை விட்டும், உலகத்தின் கேடுபாடுகளை விட்டும், கர்த்தரோடு மலையிலே ஏறுவதும், மறுரூபமலையின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதும் எவ்வளவு அவசியம்! அங்கே, சூரியன் இனிமையாய் பிரகாசிக்கும், குளிர்ந்த மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்கும்.

நீங்கள், கிறிஸ்துவோடுகூட, உன்னத ஜெப ஜீவியம் செய்துவிடாதபடி, தடுக்கிற அநேக அடிமைத்தனங்களுமுண்டு. உங்களை பாதாளக்குழிக்குள் இழுக்கிற, சிற்றின்ப வல்லமைகளுமுண்டு. நீங்கள் ஒருபோதும் தோல்வியடைகிறவர்களாயிருக்கக்கூடாது. ஜெயிக்கிறவர்களாகவும், சுதந்தரிக்கிறவர்களாகவுமிருக்க வேண்டும்.

உன்னதமான ஜெய ஜீவியத்தை, உங்களுக்குத் தருவதற்காகத்தான், "கிறிஸ்து இயேசுவுக்குள், நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்" (எபேசி. 2:7). அவர் உன்னதமான தேவன். 91-ம் சங்கீதத்தை வாசிக்கும்போது, உன்னதமானவர் தருகிற, உன்னதமான ஆவிக்குரிய அனுபவங்களைக் காணலாம். "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய்" (சங். 91:1,9).

இதற்காக தேவபிள்ளைகளே, "கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" (கொலோ. 3:1,2). அதுதான் கிறிஸ்துவோடு இணைந்திருக்கிற பரிசுத்த ஸ்தலம். இதற்கு உறுதியான விசுவாசம், நம்பிக்கை, அன்பு, அபிஷேகம், வெளிப்படுத்தல் தேவை. ஆகவே, இவைகளை நாடித் தேடுங்கள். அப்படிப்பட்டதான ஆசீர்வாதங்கள் மேல், உங்கள் கண்கள் பதிந்திருக்கட்டும்.

தகப்பன் வீட்டில், உன்னத நிலைமையிலிருந்த இளையகுமாரன், தன் ஆஸ்தி களை விற்று, கீழான நிலைமைக்கு வந்தான். முடிவில் அவனுக்கு கிடைத்தது, பன்றி மேய்க்கும் வேலை. பன்றிகளின் தவிட்டினால், தன்னுடைய வயிற்றை நிரப்ப ஆவலோடிருந்தான். பின்மாற்றக்காரருடைய வாழ்க்கை, எவ்வளவு கீழ்த்தரமான நிலைமைக்கு கொண்டுச் செல்லுகிறது, பாருங்கள்.

ஆகவே உலகத்துக்கும், பாவத்துக்கும், மரித்த அனுபவத்திற்கும் பின்பு, கிறிஸ்து வோடு தங்கியிருக்கும், மலையின் உச்சி அனுபவங்களை வாஞ்சியுங்கள். மலை யின் அடிவாரத்திலே, சலசலப்புகள், சஞ்சலங்கள் உண்டாயிருக்கும். காட்டு மிருகங் கள் உலாவும். ஆனால், மலையுச்சியிலே தேவ பிரசன்னமும், தேவ மகிமையும் மிகுதியாயிருக்கும். ஆகவே, உலகத்துக்கு அந்நியரும், பரதேசியுமாய் ஜீவியுங்கள்.

நினைவிற்கு:- "பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது" (கொலோ. 3:2,3).

=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========

“...but the land which you cross over to possess is a land of hills and valleys, which drinks water from the rain of heaven” (Deuteronomy 11:11).

God has called you to inherit all the Spiritual blessings, heavenly blessings and the eternal blessings. So, you have to lead a special life, unlike others who lead an ordinary life. It is for this, God has shed His blood and redeemed you and has anointed you with the Holy Spirit and power. So, resolve to lead a victorious life with holiness so that you become the heir.

The nation which the Israelites were called to inherit had hills in it. The ‘mountains, hills and the peaks’ indicate the prayer life of most high. How essential it is to climb the mountain with God and receive the experience of the Mount of Transfiguration after getting away from the world and its destructions! There, the sun will shine pleasantly and the cool breeze will be there always.

There are several bondages which prevent you from having a prayerful life with Christ. There are certain powers of sensuality which pulls you into the hade. You should never be the defeated ones but should be victorious and inheriting ones. “…..raised us up together, and made us sit together in the heavenly places in Christ Jesus” (Ephesians 2:6). He is God of Most High. When you read the Psalm 91, you can find there the heavenly spiritual experiences which the Most High gives. “He who dwells in the secret place of the Most High shall abide under the shadow of the Almighty. Because you have made the Lord, who is my refuge, Even the Most High, your dwelling place” (Psalms 91:1, 9).

Dear children, for this “…. seek those things which are above, where Christ is, sitting at the right hand of God” (Colossians 3:1, 2). That is the Holy venue where we are united with Christ. For this, profound faith, hope, love, anointment and revelation are required. So, seek and search for these things. Let your eyes be fixed on such blessings.

The prodigal son who was in a high position at his father’s home, sold out his property and slipped down to a lower level. In the end, he was hired to groom the swine. He was even eager to eat the bran that was meant for the swine. Please note to what a low level, the life of those who get back to their old ways, slide down.

So, long for the top of the hill experiences of dwelling with Christ. There may be some hiccups and sorrows in the base of the hill. Wild animals may roam about there. But at the top of the hill, the presence of God and the divine glory will be in plenty. So, live like strangers and pilgrims to the world.

To meditate: “Set your mind on things above, not on things on the earth. For you died, and your life is hidden with Christ in God” (Colossians 3:2-3).

Land Of Hills! - மலைகளுள்ள தேசம்! :- Daily Devotions Land Of Hills! - மலைகளுள்ள தேசம்! :- Daily Devotions Reviewed by Christking on August 02, 2018 Rating: 5
Powered by Blogger.