CANNOT BE WITHHELD! - தடைபடாது! :- Daily Devotions
"தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது" (யோபு 42:2).
உங்கள் வாயில், எப்போதும் விசுவாச வார்த்தைகளிருக்கட்டும். "முடியும், தேவனாலே முடியும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. தேவரீர் சகலத் தையும் செய்ய வல்லவர்" என்று, திரும்பத் திரும்ப, அறிக்கை செய்யுங்கள். டாக்டர்களால் கூடாதது, உலகத்தின் பெரிய தலைவர்களால் கூடாதது, நம்முடைய ஆண்டவராலே கூடும். நீங்கள் ஜெபிக்கும்போது, உலகத்தை அசைக்கிற தேவனு டைய கரத்தை நீங்கள் அசைக்கிறீர்கள். அவரால் எல்லாம் கூடும்.
பலர் கேட்பார்கள், இது உங்களால் முடியுமா? முடியாதா? இந்த காரியத்தை முடித்துத் தருவீர்களா, இல்லையா? ஆனால், மனுஷனால் எல்லாம் செய்ய முடியாது. மனுஷன் மனம்மாறக் கூடியவன். அவனுடைய அறிவும், ஞானமும், திறமையும் குறைவுள்ளது. சில காரியங்களை, அவன் செய்வேன் என்று சொல்லுவான். ஆனால் அவன் முயற்சித்தாலும், அவனால் செய்ய முடிவதில்லை.
ஒரு அருமையான சகோதரியின் கணவனுக்கு வேலையில்லை. பிள்ளைகளைப் படிக்க வைக்க, பணமில்லை. வறுமைமேல் வறுமை. இந்த நேரத்தில், அம்மைநோய் வேறு பிடித்துவிட்டது. ஏதாவது சமைத்து, தன் இளம் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று, பிரிட்ஜ்ஜை திறந்து பார்த்தால், அங்கே வெறுமையாக காணப்பட்டது. ஆண்டவர் மெல்லிய குரலில் பேசினார். "உலகமும் ஒருகாலத்தில் வெறுமையாகத் தான் இருந்தது. அந்த வெறுமையிலிருந்து, சகலவற்றையும் நான் சிருஷ்டித்தேன். இருளிலிருந்து வெளிச்சத்தைத் தோன்றப்பண்ணினேன் (2 கொரி. 4:6). உன் வெறுமைக்காகவும், என்னை நீ துதிப்பாயா?" என்று கேட்டார்.
அந்த சகோதரி, பிரிட்ஜ்ஜை திறந்து வைத்துக்கொண்டு, சத்தமாய் கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம்! கர்த்தர் இன்னொருவர் மூலமாக பேசி, "இந்த வீட்டுக்கு இன்னின்ன தேவையுள்ளது. நீ வாங்கிக்கொண்டுபோ" என்று சொல்லி, பேசினார். மட்டுமல்ல, அவர்களுடைய நோய் நீங்கி, குறைகளை மாற்றினார். தேவனால், கூடாத காரியம் ஒன்றுமேயில்லை.
மரியாள் இது எப்படியாகும், என்று நினைத்ததுபோல, உங்கள் வாழ்க்கை யிலும் கூட, பல கேள்விகள் எழும்பலாம். என் மகளுக்கு, இன்னும் திருமணமாக வில்லையே, எனக்கும், கணவருக்கும் வேலை கிடைக்கவில்லையே, வீடு கட்ட முடியவில்லையே, இது எப்படியாகும்? கர்த்தரைத் துதியுங்கள். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் ஆராதிக்கிற தேவன், சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதி. 17:1). வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமுடையவர் (மத். 28:18).
ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீதை எடுத்து, ராஜாவாக உயர்த் தியவர், சிறையிருப்பில், பாபிலோனுக்கு கைதியாய்ப் போன தானியேலை எடுத்து உயர்த்தி, அவனை முழு பாபிலோனுக்கும், பிரதம மந்திரியாய் உயர்த்தினார். மனுஷரால் கூடாததுதான்; தேவனால் எல்லாம் கூடும் (மத். 19:26).
இயேசு கிறிஸ்து, எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிற மெய்யான ஒளி. குடிகாரனை, பரிசுத்தனாய் மாற்ற அவரால் முடியும். சட்டமும், சமுதாயமும் திருத்த முடியாத கொடியவனை, தன்னுடைய ஊழியக்காரன், பரிசுத்தவானாக மாற்ற கர்த்தரால் முடியும். எந்த மார்க்கத்திலும், இது முடியாது. ஆனால், கிறிஸ்தவ மார்க்கத்தில், அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.
நினைவிற்கு:- "கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல, அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது" (மத். 17:20).
=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========
“I know that you can do everything and that no purpose of yours can be withheld from you” (Job 42:2).
Let the words of faith be always in your mouth. Repeatedly declare “Possible, possible for God. Nothing is impossible for god. God can do everything. God is powerful to do anything.” Things which the doctors cannot do and things which the famous leaders of the world cannot do are possible for our God. When you pray, you shake the hands of God who shakes the world. Everything is possible for Him.
Many people put forward these questions. Is it possible for you? Can you complete this work for me? But, man cannot do everything. Man is fickle minded and liable to change. Man’s knowledge, wisdom and talent are imperfect. He would say that he could do certain things but when he tries to execute them, he is found to be incapable.
One dear sister’s husband was jobless. They did not have money for their children’s education. Poverty was at its worst in the family. Added to other, they were also affected by smallpox. Even the fridge was empty thus making it impossible to cook anything for the starving children. God spoke in a thin voice “once the world was also empty. I created everything from that emptiness. I commanded the light to shine out of darkness” (II Corinthians 4:6). He asked, “Will you praise me for that emptiness also?”
That sister kept the doors of the fridge open and began to pray. What a surprise? God spoke through another person and commanded that all the requirements of that home be sent to it. Not only that. There was no more sickness and turned all the shortages into plenty. Nothing is impossible for God.
Mary thought “How can this be?” and similar questions may arise in your life also. Your issues of worry may be, “My daughter’s marriage is getting delayed or there is no good employment for me and my husband or I am unable to build our own house and so on. How could these things become a reality? Praise God. There is nothing impossible for God. God, you worship is Almighty (Genesis 17:1). He is the one to have all authority in heaven and on earth (Mathew 28:18).
David, who was grazing the cattle, was crowned as a king. Daniel, who had gone to Babylon as a prisoner, was elevated as Prime Minister of the whole of Babylon. “With men this is impossible, but with God all things are possible” (Mathew 19:26).
Jesus is the true light which makes any man glitter. He can turn a drunkard into a saint. One person may be a scoundrel whom the law and society could not reform, but God could turn even such persons into His servants or saints. In no other religion this is possible but in Christianity, everything is possible to those who believe Him.
To meditate: “Because of your unbelief; for assuredly, I say to you, if you have faith as a mustard seed, you will say to this mountain, ‘Move from here to there,’ and it will move; and nothing will be impossible for you” (Mathew 17:20).
CANNOT BE WITHHELD! - தடைபடாது! :- Daily Devotions
Reviewed by Christking
on
August 08, 2018
Rating: