பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார! - Bible Reference

13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன், பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது, நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
எசேக்கியேல் 28 :13
14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணுப்பட்ட கேருப், தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன், அக்கினிமயமானகற்களின் நடுவே உலாவினாய்.
எசேக்கியேல் 28 :14
15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
எசேக்கியேல் 28 :15
16 உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய், ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
எசேக்கியேல் 28 :16
17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று, உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய், உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன், ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
எசேக்கியேல் 28 :17

நேபுகாத்நேச்சார்
29 பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
தானியேல் 4 :29
30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினாலும், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.
தானியேல் 4 :30
31 இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.
தானியேல் 4 :31
32 மனுஷரினின்று தள்ளப்படுவாய். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப்போல் புல்லை மேய்வாய். இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.
தானியேல் 4 :32
33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று. அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான். அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.
தானியேல் 4 :33

ஏரோது ராஜா
21 குறித்தநாளிலே ஏரோது ராஜாவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
அப்போஸ்தலர் 12 :21
22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
அப்போஸ்தலர் 12 :22
23 அவன் தேவனுக்கு மகிமையைச்செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுப்புழுத்து இறந்தான்.
அப்போஸ்தலர் 12 :23
24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
அப்போஸ்தலர் 12 :24
பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார! - Bible Reference
Reviewed by Christking
on
August 04, 2018
Rating:
