A LAND ON WHICH THE EYES OF GOD ARE! - கண்கள் பதித்த தேசம்! :- Daily Devotions
"அது உன் தேவனாகிய கர்த்தர், விசாரிக்கிற தேசம். வருஷத்தின் துவக்கமுதல் வருஷத் தின் முடிவுமட்டும், எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள், அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்" (உபா. 11:12).
கர்த்தர் உங்கள்மேலும், நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தின் மேலும், அக்கறையுள்ளவராயிருக்கிறார். அவர் தமது கண்களை அதில் பதித்து, ஊன்றி கவனிக்கிறார். "என் பிள்ளைகளே, என் கண்கள், உங்கள்மேல் பதிந்திருக் கும். அதோடு, என் பார்வை, என் கவனமெல்லாம் உங்கள் மேலேயே இருக்கும். பயப்படாதிருங்கள்" என்கிறார்.
இன்றைக்கு விஞ்ஞானத்தின் விளைவாக, "எலக்ட்ரானிக் கண்கள்" வந்துவிட்டன. பூட்டியிருக்கிற ஒரு பெட்டிக்குள், என்னென்ன இருக்கின்றன என்பதை, எக்ஸ்ரேயின் மூலமாக கண்டுபிடிக்கிறார்கள். வீட்டின் பல பகுதிகளிலெல்லாம், சிறு சிறு கேமராக்களை, கண்கள் போல பதித்து வைத்து, வெளியிலே என்ன நடக்கிறது என்பதை, கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆள், அந்த பக்கம் வந்துவிட்டால் உடனே, எச்சரிப்பு மணி அடிக்கிறது. விளக்குகளெல்லாம் பளிச்சென்று எரிகிறது.
ஒவ்வொரு தேசமும், தங்கள் எல்லைகளை கண்காணிக்கும் கண்களாக, ரடார் (Radar) என்ற கருவிகளை, பொருத்தி வைத்திருக்கிறார்கள். எதிரிகளின் விமானம் வருமென்றால், உடனே, இந்த கருவிகள் அதனை கண்டுபிடிக்கும். எந்த திசையில் வருகிறது, என்ன வேகத்தில் வருகின்றன என்பதை தெரிவிக்கும். இமைப்பொழுதில் அதிலுள்ள பீரங்கிகள் இயங்கி, எதிரியின் விமானத்தை சுட்டு வீழ்த்துகின்றன. இவை காவல் கண்களாய் விளங்கி, தேசத்தைப் பாதுகாக்கின்றன.
முதன் முதலாக ஆகார், கர்த்தருக்கு "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்று பெயரிட்டாள். அவள் சூர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது, கர்த்தர் அவளை அன்போடு கண்டார். ஆம், கர்த்தர் உங்களைக் காண்கிறவர். நன்மையானவை களையும் காண்கிறார். தீமையானவைகளையும் காண்கிறார். இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்ற ஒரு சகோதரி, தன்னோடேகூட, "நீர் என்னைக் காண்கிற தேவன்" என்ற வசனத்தை, பிரேம் போட்டு எடுத்துச் சென்று, தன் வீட்டின் சுவரிலே மாட்டி வைத்தார்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம், அவளுடைய தனிமை உணர்வின் வேதனை மறைந்து போயிற்று.
இன்றைக்கு கர்த்தருடைய கண்கள் உங்களை எப்படிப் பார்க்கிறது? துக்கத் தோடா? அல்லது மகிழ்ச்சியோடா? சகரியா தீர்க்கதரிசி சொல்லுகிறார், "பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய, கர்த்தருடைய ஏழு கண்களும், செருபாபேலின் கையில் இருக்கிற, தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது" என்றார் (சகரி. 4:10). கர்த்தருக்காக நீங்கள் எதையாகிலும் செய்யும்போது, கர்த்தர் அதை மகிழ்ச்சியோடு பார்க்கிறார். "நல்லது உண்மையும், உத்தமமுமான ஊழியக்காரனே" என்று சொல்லி, அன்போடு தட்டிக் கொடுத்துப் பாராட்டுகிறார்.
நீங்கள் செய்கிற ஊழியம் சிறிதானாலும், பெரிதானாலும், அதிலே பெரிய ஆசீர் வாதத்தைத் தரும்படி, கர்த்தருடைய கண்கள் உங்களை கூர்ந்து நோக்கிக்கொண்டிருக் கின்றன. கர்த்தர் என்னை காண்கிறார் என்கிற எண்ணம் உங்களுக்குள்ளே, தேவ பயத்தைக் கொண்டு வரட்டும். என் பாவங்கள், மறைந்திருக்க முடியாது. அறைக் கதவுக்குள்ளே செய்கிற அக்கிரமம், அவருக்குத் தெரியும். அவர், எல்லாவற்றையும் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார் என்ற நினைவு, உங்களுக்கு இருக்கு மானால், பாவம் செய்ய மாட்டீர்கள்.
நினைவிற்கு:- "தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது" (2 நாளா. 16:9).
=======C=H=R=I=S=T=K-I=N=G=.=I=N=========
“….a land for which the Lord your God cares; the eyes of the Lord your God are always on it, from the beginning of the year to the very end of the year” (Deuteronomy 11:12).
God is concerned about you and the nation which you are going to inherit. He has fixed His eyes on it and watches closely. He says, “Children, my eyes are fixed on you. Further, my look and my concentration will always be on you only. Do not fear.”
Due to the advancement of science, the ‘electronic eyes’ have come into existence today. People are able to identify the contents of a locked box with the help of scanners. They fix eye like cameras in their homes and watch all things which happen outside. When an outsider enters their premises, the alarm bell rings and the lights get switched on.
Every Nation makes use of the Radars to have a watch over their boundaries. If an aircraft of an enemy enters their territory, these devices will notify them immediately. These devices will also indicate the vital information like at what speed it comes and at what direction it moves etc. The artilleries will begin to fire in a flash and thus the aircraft which intruded will be blown off. These devices protect the nations as ‘eyes of security.’
Hagar was the first to name God as “You are God who sees.” When she was roaming in the wilderness of Shur, God looked at her with love. Yes, God is the one who looks at you. He sees both the good things and the bad things too. A sister, who shifted from Chennai to a foreign country, carried the framed verse “You are God who sees” and displayed it in the new home there. Every time she saw the verse hanging on the wall, the sorrow of solitude diminished.
How do the eyes of God see you today? Is it with sadness or with happiness? The Prophet Zechariah says, “For these seven rejoice to see the plumb line in the hand of Zerubbabel. They are the eyes of the Lord, Which scan to and fro throughout the whole earth” (Zechariah 4:10). When you do something for God, He looks at you with love. He will pat your back with love saying, “Well done, good and faithful servant.”
The ministry you do may be small or big but the eyes of God are sharply focussed on you to offer you great blessings. Let the feeling of God looking at you, bring fear over God in you. You will never commit sin if you have a thought that the sins cannot be hidden, He knows everything and He will bring them out and present everything for judgement.
To meditate: “For the eyes of the Lord run to and fro throughout the whole earth, to show Himself strong on behalf of those whose heart is loyal to Him” (II Chronicles 16:9).
A LAND ON WHICH THE EYES OF GOD ARE! - கண்கள் பதித்த தேசம்! :- Daily Devotions
Reviewed by Christking
on
August 06, 2018
Rating: