Virumbathe Maname - விரும்பாதே மனமே - Christking - Lyrics

Virumbathe Maname - விரும்பாதே மனமே

விரும்பாதே மனமே - உலக வாழ்வை
விரும்பாதே மனமே - பதவி என

தரும் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்
கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை

அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா
மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும்

பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்
ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார்

திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே
அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும்

பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்
என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ

லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு
ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே

நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு.
Virumbathe Maname - விரும்பாதே மனமே Virumbathe Maname - விரும்பாதே மனமே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.