Vinai Suzhathintha - வினை சூழா திந்த இரவினில் காத்தாள் - Christking - Lyrics

Vinai Suzhathintha - வினை சூழா திந்த இரவினில் காத்தாள்

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்
விமலா கிறிஸ்து நாதா

கனகாபி ஷேகனே அவனியர்க் கொளிர் பிர
காசனே பவநாசனே ஸ்வாமி

சென்ற பகல் முழுவதும் என்னைக் கண் பார்த்தாய்
செய் கருமங்கலில் கருணைகள் பூத்தாய்
பொன்ற தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்
பொல்லாப் பேயின் மோசம்
நின்றெனைக் காத்தாய்

சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே
ஜோதிநட்சத்திரம் எழுந்தன வானே
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன் அடியேனும் பள்ளி கொள்வேனே

ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்
பட்சம் வைத்தாள்வையேல் அதுவே ஆனந்தம்

இன்றைப் பொழுதில் நான் செய்
பாவங்கள் தீராய்
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்
உயிரை எடுப்பையேல் உன் முத்தி தாராய்
Vinai Suzhathintha - வினை சூழா திந்த இரவினில் காத்தாள் Vinai Suzhathintha - வினை சூழா திந்த இரவினில் காத்தாள் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.