Vetri Kodi Pidithiduvom - வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் - Christking - Lyrics

Vetri Kodi Pidithiduvom - வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்

வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே நீ
அஞ்சாதே என் மகளே

ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு நாம்
அலகையை வென்று விட்டோம்

காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
Songs Description:
Vetri Kodi Pidithiduvom - வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் Vetri Kodi Pidithiduvom - வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.