Vathai Unthan Koodarathil - வாதை உந்தன் கூடாரத்தை - Christking - Lyrics

Vathai Unthan Koodarathil - வாதை உந்தன் கூடாரத்தை

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்

ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு

கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்

அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்

ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்
Vathai Unthan Koodarathil - வாதை உந்தன் கூடாரத்தை Vathai Unthan Koodarathil - வாதை உந்தன் கூடாரத்தை Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.