Varavenum Ena Tharase - வரவேணும் எனதரசே - Christking - Lyrics

Varavenum Ena Tharase - வரவேணும் எனதரசே

வரவேணும் எனதரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

அருணோ தயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

வேதா கருணா கரா மெய்யான பரா பரா
ஆதார நிராதரா அன்பான சகோ தரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா உன் தாபரம் நல்குவாயே

படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா
முடியா தருள் போசனா முதன் மா மறைவாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்

வானோர் தொழும் நாதனே மறையாகம போதனே
கானாவின் அதீதனே கலிலேய வினோதனே
ஞானாகரமே நடு நிலை யோவா
நண்பா உனத நன்மையின் மகா தேவா
Varavenum Ena Tharase - வரவேணும் எனதரசே Varavenum Ena Tharase - வரவேணும் எனதரசே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.