Vande Kadaikan Paarumen - வந்தே கடைக்கண் பாருமேன் - Christking - Lyrics

Vande Kadaikan Paarumen - வந்தே கடைக்கண் பாருமேன்

வந்தே கடைக்கண் பாருமேன் - சர்வேசுரனே
வந்தே கடைக்கண் பாருமேன்

வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க

கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே

எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க

எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா

மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்

எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி

வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே
Vande Kadaikan Paarumen - வந்தே கடைக்கண் பாருமேன் Vande Kadaikan Paarumen - வந்தே கடைக்கண் பாருமேன் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.