Vaelaikaaran Kangal Than - வேலைக்காரன் கண்கள் தன் - Christking - Lyrics

Vaelaikaaran Kangal Than - வேலைக்காரன் கண்கள் தன்

வேலைக்காரன் கண்கள் -தன்
எஜமான் கரம் நோக்கும்
தேவா எனக்காய் எல்லம் செய்யும்
உம் கரத்தை என்றும் நோக்குவேன்

நீதியின் வலது கரம்
நீதிமானை என்றும் தாங்கிடுமே
விழுகையில் வியாதியின் நேரங்களில்
வழுவாது உம் கரம் தாங்கிடுமே

கடலும் ஆறும் தடையில்லை
ஆண்டவர் கரம் என்னோடிருந்தால்
தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்ல
ஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன்

சத்துவமுள்ள உந்தன் கரம்
நித்தம் காத்து வழி நடத்திடுமே
உம் கரம் பற்றியே என்றுமே நான்
பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே
Vaelaikaaran Kangal Than - வேலைக்காரன் கண்கள் தன் Vaelaikaaran Kangal Than - வேலைக்காரன் கண்கள் தன் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.