Vaarumaiyah Pothakarae - வாருமையா போதகரே - Christking - Lyrics

Vaarumaiyah Pothakarae - வாருமையா போதகரே

வாருமையா போதகரே
வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியிலே
சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே
உத்தமரே வாருமையா
களித்திரவு காத்திருப்போம்
காருண்யரே வாருமையா

நானிருப்பேன் நடுவிலென்றீர்
நாதா உன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் புரிவீர்

மனக்கண்கள் மறைக்குதையோ
மன்னவனார் சமூகமதை
இமைப்பொழுதில் மறந்தீரே
ஏகுபரா வாருமையா

உந்தன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவீர்
பந்தமற பரிகரித்தே
பாக்கிய மளித்தெம்மை ஆண்டருள்வீர்
Vaarumaiyah Pothakarae - வாருமையா போதகரே Vaarumaiyah Pothakarae - வாருமையா போதகரே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.