Vaarum Emathu Varumai - வாரும் எமது வறுமை நீக்க வாரும் - Christking - Lyrics

Vaarum Emathu Varumai - வாரும் எமது வறுமை நீக்க வாரும்

வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனே
மழை தாரும்,ஜீவனே

பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகு
கேடும் நீண்டதே

நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்
கஷ்டம் ஆச்சுதே

பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்
பாறல் ஆச்சுதே

தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்
தயங்கிறோம் மெய்யாய்

கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்
தயங்கல் தீருமே
Vaarum Emathu Varumai - வாரும் எமது வறுமை நீக்க வாரும் Vaarum Emathu Varumai - வாரும் எமது வறுமை நீக்க வாரும் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.