Vaana Nagarathin Menmaiyena - வான நகரதின் மேன்மையென - Christking - Lyrics

Vaana Nagarathin Menmaiyena - வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்

பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான

அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம்

அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரிடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல்

நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்ங்கள் எல்லாரும் தூதர் நல்லோரும்
ஒய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள
Vaana Nagarathin Menmaiyena - வான நகரதின் மேன்மையென Vaana Nagarathin Menmaiyena - வான நகரதின் மேன்மையென Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.