Vaan Purave Engal - வான் புறாவே எங்கள் - Christking - Lyrics

Vaan Purave Engal - வான் புறாவே எங்கள்

வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
வன் செட்டைகள் விரித்தே
எம் அச்சமெல்லாம் அகல
வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில்

ஆவியின் அக்கினியால் தரிசித்திட
அனலுள்ள இருதயம் அளித்திடவே
அன்பினால் அனைத்தோடும் கனலடைய
அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

ஊற்றிடுமே உமதாவியை
மாற்றிடுமே உம்மைப் போலவே

சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய
ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

நேசரே நினைத்திடா வேளை வருவீர்
சேர்த்திட தூயவரை உமதுடனே
வேளையும் காலமும் சாயுமுன்னே
வேளையிது தீர கனிந்திறங்கிடுமே
Vaan Purave Engal - வான் புறாவே எங்கள் Vaan Purave Engal - வான் புறாவே எங்கள் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.