Uyirulla Yesuvin Karangalil - உயிருள்ள இயேசுவின் கரங்களிலே - Christking - Lyrics

Uyirulla Yesuvin Karangalil - உயிருள்ள இயேசுவின் கரங்களிலே

உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
உபயோகியும்....

உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை
என்றும் பற்றிக் கொள்ளுவேன்
என் வாழ்வில் நீர்தான் எல்லாமே

ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே

உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
உம்மை நம்பாமல் நித்தியமில்லை

நீர் செய்த சகல உபரகாரங்கள்
நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்
அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே

உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்
நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்
பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்
சாட்சியாய் என்றும் வாழுவேன்
Uyirulla Yesuvin Karangalil - உயிருள்ள இயேசுவின் கரங்களிலே Uyirulla Yesuvin Karangalil - உயிருள்ள இயேசுவின் கரங்களிலே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.