Uruguayo Nenjame Nee - உருகாயோ நெஞ்சமே நீ - Christking - Lyrics

Uruguayo Nenjame Nee - உருகாயோ நெஞ்சமே நீ

உருகாயோ நெஞ்சமே நீ
குருசினில் அந்தோ பார்
கரங்கால்கள் ஆணியேறி
திருமேனி நையுதே

தாகம் மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே
இயேசு பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குவார்

மூவுலகை தாங்கும் தேவன்
மூன்று ஆணி தாங்கிடவோ
சாகும் வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார்

வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றிகெட்டு
புறம்பாக்கினாரன்றோ

மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நில மெல்லாம் புரக்க
ஈனக்குருசேறினார்.
Uruguayo Nenjame Nee - உருகாயோ நெஞ்சமே நீ Uruguayo Nenjame Nee - உருகாயோ நெஞ்சமே நீ Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.