Unnai Athisayam Kana - உன்னை அதிசயம் காணச் செய்வேன் - Christking - Lyrics

Unnai Athisayam Kana - உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
என்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் பிளந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே

குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே

வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே
Unnai Athisayam Kana - உன்னை அதிசயம் காணச் செய்வேன் Unnai Athisayam Kana - உன்னை அதிசயம் காணச் செய்வேன் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.