Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் - Christking - Lyrics

Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன்

ஐயா ஸ்தோத்திரம்
இயேசையா ஸ்தோத்திரம்

எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்

மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்

பெலத்தால் இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கி
வாழ வைத்தவரே

நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே

இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்

கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்
Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் Ummale Naan Oru Senaikul - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.