Ummai Naadi Thedum - உம்மை நாடித் தேடும் மனிதர் - Christking - Lyrics

Ummai Naadi Thedum - உம்மை நாடித் தேடும் மனிதர்

உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்

மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும் தூயோனே உமக்கே

ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒருபோதும் உம்மைப் பிரியேன்
மறுவாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்

என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில்தான்
என் சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்

உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
Ummai Naadi Thedum - உம்மை நாடித் தேடும் மனிதர் Ummai Naadi Thedum - உம்மை நாடித் தேடும் மனிதர் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.