Andraadam andraadam kaapaatrineer - அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் - Christking - Lyrics

Andraadam andraadam kaapaatrineer - அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்

அன்றாடம் அன்றாடம் [C min T145 4/4]
அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர்
அன்போடு நடத்தி வந்தீர்
அந்நாளும் இந்நாளும் காப்பாற்றினீர்
எந்நாளும் நடத்திடுவீர்

Andraadam andraadam kaapaatrineer
Anbodu nadathi vandheer
Annaalum innaalum kaapaatrineer
Ennaalum nadathiduveer

பேர் சொல்லி அழைத்து
பிள்ளை என்றணைத்து
பின்பற்றச் செய்தீரைய்யா
ஆவியில் நிறைத்து
அல்லல்கள் குறைத்து
ஆசீர்வதித்தீரைய்யா

Per solli azhaithu
Pillai endranaithu
Pinpatra seidheeraiyaa
Aaviyil niraithu
allalgal kuraithu
aaseervadhitheeraiyaa

எங்களை நீர் நினைப்பதற்கும்
எங்களை விசாரிப்பதற்கும்
நாங்கள் எம்மாத்திரம் தேவா

Engalai neer ninaipadharkum
Engalai visaaripadharkum
Naangal emmaathiram dheva

மேன்மையானதே மகத்துவமானதே
வானம் தாண்டியே உம் நாமம் நிற்குதே
விண்மீன்களை வெண்ணிலவை அண்ணாந்து பார்க்கையிலே
உம் கைகளின் கிரியைகளை சற்றே யோசிக்கையிலே

Menmaiyaanadhe magathuvamaanadhe
Vaanam thaandiye um naamam nirkudhe
Vinmeengalai vennilavai annaandhu paarkaiyile
Um kaigalin kiriyaigalai satre yosikkaiyile

ஜனங்கள் யாவரும் ஒன்றுமில்லையே
உமக்கு முன்பு நான் மாயை மாயையே
நான் யாரென்று அறிந்தவரே மண்ணென்று தெரிந்தவரே
என் நாட்களை அளந்தவரே புல்லென்று புரிந்தவரே

Janangal yaavarum ondrum illaiye
Umakku munbu naan maayai maayaiye
Naan yaarendru arindhavare mannendru therindhavare
En naatkalai alandhavare pullendru purindhavare

தொலைந்த மனிதரை தேடினீரைய்யா
தவறும் மனிதரை தாங்கினீரைய்யா
பாவியென்று தெரிந்திருந்தும் நீர் என்னை மீட்டீரைய்யா
சாதாரண மனிதரையும் மேலோகம் சேர்த்தீரைய்யா

tholaindha manidharai thedineeraiyaa
thavarum manidharai thaangineeraiyaa
paaviyendru therindhirundhum neer ennai meetteeraiya
saadhaarana manidharaiyum melogil sertheeraiyaa
Andraadam andraadam kaapaatrineer - அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Andraadam andraadam kaapaatrineer - அன்றாடம் அன்றாடம் காப்பாற்றினீர் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

2 comments:

Powered by Blogger.