Thasare Iththaraniyai Anbai - தாசரே இத்தாரணியை அன்பாய் - Christking - Lyrics

Thasare Iththaraniyai Anbai - தாசரே இத்தாரணியை அன்பாய்

தாசரே இத்தாரணியை அன்பாய்
யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

நேசமாய் யேசுவைக் கூறுவோம் அவரைக்
காண்பிப்போம் மாவிருள் நீக்கு வோம்
வெளிச்சம் வீசுவோம்

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே

பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
யேசு கனிந்து திரிந்தனரே

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

இந்தியதேச மாது சிரோமணிகள்
விந்தை யளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட

மார்க்கம் தப்பிநடப் போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்
ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்
Thasare Iththaraniyai Anbai - தாசரே இத்தாரணியை அன்பாய் Thasare Iththaraniyai Anbai - தாசரே இத்தாரணியை அன்பாய் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.