Senaigalin Devan Nammodu - சேனைகளின் தேவன் நம்மோடு - Christking - Lyrics

Senaigalin Devan Nammodu - சேனைகளின் தேவன் நம்மோடு

சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்
நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர்

எரிகோ போன்ற சோதனைகள்
எதிரிட்டு வந்தாலும்
தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்
ஜெயத்தைத் தந்திடுவார்

சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்
பாக்கியம் அடைந்திடுவாய்
உயர்த்திடுவார் தாங்கிடுவார்
நன்மையால் நிரப்பிடுவார்

ஆவியின் வரத்தை தந்திடுவார்
ஆவியை பொழிந்திடுவார்
விரைந்திடுவாய் எழும்பிடுவாய்
சீயோனில் சேர்ந்திடுவாய்

சபையோரே நாம் எழும்பிடுவோம்
வசனத்தைப் பிடித்திடுவோம்
வென்றிடுவோம் சென்றிடுவோம்
ஊழியம் செய்திடுவோம்
Senaigalin Devan Nammodu - சேனைகளின் தேவன் நம்மோடு Senaigalin Devan Nammodu - சேனைகளின் தேவன் நம்மோடு Reviewed by Christking on May 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.