Nalla Devane Nyana - நல்ல தேவனே ஞான ஜீவனே
நல்ல தேவனே ஞான ஜீவனே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்
போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே
காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்
சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப்போக்கி
இலங்கப் பண்ணுமே
இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை
உதவவேணுமே
ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி
ஈந்தருளுமே
கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை
மிகவும் காவுமே
வல்ல உமது கருணை தன்னை
வாழ்த்திப் போற்றுவேன்
போன ராவிலே பொல்லாங்கின்றியே
ஆன நல்ல அருளினாலே
அன்பாய்க் காத்தீரே
காலையைக் கண்டேன் கர்த்தர் உம்மையே
சாலவும் துதித்துப் போற்றிச்
சார்ந்து கொள்ளுவேன்
சென்ற ராவதின் இருளைப் போலவே
என்றன் பாவ இருளைப்போக்கி
இலங்கப் பண்ணுமே
இன்று நானுமே இன்பமாகவே
உன்றன் வழியில் நடக்கக் கருணை
உதவவேணுமே
ஒளியின் பிள்ளையாய் ஊக்கமாகவே
எளியன் இன்றும் நடக்க ஆவி
ஈந்தருளுமே
கையைக் காவுமே கண்ணைக் காவுமே
மெய்யைக் காத்து என்றன் மனதை
மிகவும் காவுமே
Nalla Devane Nyana - நல்ல தேவனே ஞான ஜீவனே
Reviewed by Christking
on
May 08, 2018
Rating:
No comments: