Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் எமை - Christking - Lyrics

Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் எமை

மேசியா ஏசு நாயனார் எமை
மீட்கவே நரனாயினார்

நேசமாய் இந்தக் காசினியோரின்
நிந்தை அனைத்தும் போக்கவே
மாசிலான் ஒரு நீசனாகவே
வந்தார் எம் கதி நோக்கவே

தந்தையின் சுதன் மாந்தர்
சகலமும் அற வேண்டியே பாதகம்
விந்தையாய்க் குடில் மீதில் வந்தனர்
விண்ணுலகமும் தாண்டியே

தொண்டர் வாழவும் அண்டரின் குழாம்
தோத்திரம் மிகப் பாடவும்
அண்டு பாவிகள் விண்ணடையும்
ஆயர் தேடிக் கொண்டாடவும்

தேவனாம் நித்ய ஜீவனாம் ஒரே
திருச்சுதன் மனுவேலனார்
பாவிகள் எங்கள் பாவம் மாறவே
பார்த்திபன் தேவ பாலனாய்
Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் எமை Messiah Yesu Nayanar - மேசியா ஏசு நாயனார் எமை Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.