Manthayil Sera - மந்தையில் சேரா ஆடுகளே - Christking - Lyrics

Manthayil Sera - மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே

மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்பு பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

எனக்காய் பேசிட நாவு வேண்டும்
என்னைபோல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
Manthayil Sera - மந்தையில் சேரா ஆடுகளே Manthayil Sera - மந்தையில் சேரா ஆடுகளே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.