Madhura Geetham - மதுரகீதம் பாடிடுவோம் - Christking - Lyrics

Madhura Geetham - மதுரகீதம் பாடிடுவோம்

மதுரகீதம் பாடிடுவோம்
மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம்
ஆனந்தமாக கீதங்கள் பாடி
ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம்

வானங்கள் மேலாக உயர்ந்தவரை
வாழ்த்திப் புகழ்ந்து துதித்திடுவோம்
இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்
வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும்

தூதர்கள் போற்றும் தேவன் நீரே
தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே
தாகம் தீர்க்கும் ஜீவஊற்று
தம்மிடம் வருவோரை தள்ளாத நேசர்

மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே
மரணத்தை ஜெயமாக வென்றவரே
மன்னிப்பை அளிப்பீர் மாந்தரை மீட்பீர்
மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர்
Madhura Geetham - மதுரகீதம் பாடிடுவோம் Madhura Geetham - மதுரகீதம் பாடிடுவோம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.