Maara Naatha - மாராநாதா அல்லேலூயா - Christking - Lyrics

Maara Naatha - மாராநாதா அல்லேலூயா

மாராநாதா அல்லேலூயா
இயேசுராஜா வரப்போகிறார்
அல்லேலூயா பாடி துதித்திடு
ஆரவாரம் செய்து மகிழ்ந்திடு

கோடிக் கோடி தூதரோடு பாடிடுவோமே
ஜீவன் மூப்பர் கூட்டத்தோடு துதித்திடுவோமே
ஜீவன் தந்து மீட்டவரைக் கண்டிடுவோமே
ஜீவனுள்ளோர் தேசத்திலே மகிழ்ந்திடுவோமே

கவலையில்லா தேசமது, கண்ணீரில்லா தேசமது
கர்த்தரோடு வாழ்கின்ற தேசமது

பளிங்கு நதியின் ஓரத்திலே பாடிடுவோமே
பரிசுத்தர் கூட்டத்தோடு ஆராதிப்போமே
பாசமுள்ள நேசர் மார்பில் இளைப்பாறுவோம்
பாடுகளை மறந்து அங்கே ஆடிப்பாடுவோம்

இயேசுவுக்காய் வாழ்ந்தவர்க்கு பலன் கிடைக்குமே
இயேசுவோடு வாழ்வதற்கு கிருபை கிடைக்குமே
சூரியனும் சந்திரனும் அங்கே இல்லையே
ஜீவ தேவன் ஒளியாக பிரகாசிப்பாரே
Maara Naatha - மாராநாதா அல்லேலூயா Maara Naatha - மாராநாதா அல்லேலூயா Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.