Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி இந்தக் - Christking - Lyrics

Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி இந்தக்

கருணாகர தேவா இரங்கி இந்தக்
கங்குலில் எனைக் காவா

இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக

சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்
சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து
நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி
நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி

நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து
நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து
சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து
தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து

தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத்
தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை
வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு
மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு

தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத்
திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக்
காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக்
காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட
Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி இந்தக் Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி இந்தக் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.