Kartharin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா - Christking - Lyrics

Kartharin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா சகோதார
கர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்
அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி

ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்
திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோ
உனக்காய்ப் பகிரப்பட்டதல்லோ
தேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட

தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறு
ராப்போஜன பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே

அன்பின் விருந்தாமே கர்த்தருடன்
ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமே
இருதயம் சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா
Kartharin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா Kartharin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.