Kaanikkai Tharuvaayae - காணிக்கை தருவாயே கர்த்தற்குனது - Christking - Lyrics

Kaanikkai Tharuvaayae - காணிக்கை தருவாயே கர்த்தற்குனது

காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிகை தருவாயே

காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால்

பத்தில் ஒரு பங்குதானோ பத்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ

உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன் மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுமல்லோ ஈவாய்

தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே

பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில்
Kaanikkai Tharuvaayae - காணிக்கை தருவாயே கர்த்தற்குனது Kaanikkai Tharuvaayae - காணிக்கை தருவாயே கர்த்தற்குனது Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.