Kaalaiyum Maalaiyum - காலையும் மாலை எவ்வேளையும் - Christking - Lyrics

Kaalaiyum Maalaiyum - காலையும் மாலை எவ்வேளையும்

காலையும் மாலை எவ்வேளையும்
கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என தூதர் பாடிடும் தொனி கேட்குதே

கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி
திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன்

எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என் மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய்
செவ்வையான பாதையில் நடத்திடுவார்

ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்
தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்

தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடி சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னை
பாதுகாத்து உயர்த்துவார் கன்மலை மேல்

எந்தன் முகத்தை தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும்
என் சத்தம் கேட்டு தயவாய் பதிலளிப்பார்

தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாக
கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும்
Kaalaiyum Maalaiyum - காலையும் மாலை எவ்வேளையும் Kaalaiyum Maalaiyum - காலையும் மாலை எவ்வேளையும் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.