Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி - Christking - Lyrics

Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி

ஐயையா நான் ஒரு மா பாவி என்னை
ஆண்டு நடத்துவீர் தேவாவி

மெய் ஐயா இது தருணம் ஐயா என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா இப்போ தென்மேல் இரங்கி வெகு
அவசியம் வரவேணும் தேவாவி

எனதிருதயம் பாழ்நிலமாம் ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழிநடத்தும் ஞான
தீபமே உன்னத தேவாவி

ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
cash out loan

வாகான சுத்த மனம் தருவீர் நீர்
வல்லவராகிய தேவாவி

பத்தியின் பாதை விலகாமல் கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க என்னைத்
தாங்கி நடத்திடும் தேவாவி

அன்பு பொறுமை நற் சந்தோஷம் என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்
இன்ப மிகு மெய்ச் சமாதனம் இவை
யாவும் தருவீரே தேவாவி

ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க
மாசில்லாத் துய்யனே வந்துதவும் நீர்
வராமல் தீராதே தேவாவி
Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி Iya Iya Naan Oru Maa Pavi - ஐயையா நான் ஒரு மா பாவி Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.