Hosanna Paadi Paadi - ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி - Christking - Lyrics

Hosanna Paadi Paadi - ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி

ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப்பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்

ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
சிந்திய இரத்த எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
உம்மைப் போல் ஆண்டவர் யருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
உம்மையல்லால் ஒரு வாழ்வும் எனக்கில்லை

வான தூதர்கள் வாழ்த்துப் பாடிட
வாகை சூடி வானில் வருவீர்
மேகக் கூட்டங்கள் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவை கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ இனிவரும் நாளில்
என் இருதயத்தால் என்றும்
ஸ்தோத்தரிப்பேன் நீர் வரும் வரை
உம் வழி நிலைத்திருப்பேன்
Hosanna Paadi Paadi - ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி Hosanna Paadi Paadi - ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.