Ennai Undakiya - என்னை உண்டாக்கிய - Christking - Lyrics

Ennai Undakiya - என்னை உண்டாக்கிய

என்னை உண்டாக்கிய
என் தேவாதி தேவனவர்
தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை

என் மேல் அவர் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே

பெலவீன நாட்களிலே பெலன்
தந்து தாங்குவார் - பலவித
சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலம் அவரே

ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமில்லை ஆதலால்
சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின்
இருதயந்தன்னிலே வார்த்தையினால்
பேசுகின்ற ஆண்டவர் இவர்
Ennai Undakiya - என்னை உண்டாக்கிய Ennai Undakiya - என்னை உண்டாக்கிய Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.