Aviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு - Christking - Lyrics

Aviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..

1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா

2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா

3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா

4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு

5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
Aviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு Aviyana Engal Anbu - ஆவியான எங்கள் அன்பு Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.