Athisayankalai - அதிசயங்களை - Christking - Lyrics

Athisayankalai - அதிசயங்களை

1. அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்
கர்த்தாவை, வாக்கினால் இருதயத்திலேயும்
துதியுங்கள்; அவர் நாம் ஜென்மித்த நாளே
முதல் இம்மட்டுக்கும் இரக்கம் செய்தாரே.

2. நர தயாபரர் முடிய ஆதரித்து,
நற்சமாதானத்தால் மகிழ்ச்சியை அளித்து,
தயையை நம்முட மேல் வைத்தெந்நேரமும்
ரட்சித்து, தீமையை எல்லாம் விலக்கவும்.

3. உன்னதமாகிய விண்மண்டலத்திலுள்ள,
மாறாத உண்மையும் தயையும் அன்புள்ள
பிதா சுதனுக்கும் திவ்விய ஆவிக்கும்
எத்தேச காலமும் துதி உண்டாகவும்.
Athisayankalai - அதிசயங்களை Athisayankalai - அதிசயங்களை Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.