Siluvaiyil Siluvaiyil - சிலுவையில் சிலுவையில் - Lyrics

சிலுவையில் சிலுவையில் அறைந்து விட்டேன்
என் ஆசை இச்சைகளை மறந்து விட்டேன்
மரித்து விட்டேன் இனி நானல்ல
இயேசுவே என்னில் வாழ்கிறார்
சிலுவையை சுமந்து அவர் பின் சென்றேன்
அவர் சித்தம் செய்திட ஒப்புக்கொடுத்தேன்
லாபமானதை விட்டுக்கொடுத்தேன்
நஷ்டமென்று எண்ணி எறிந்து விட்டேன்
கலப்பையில் கை வைத்து திரும்ப மாட்டேன்
எதை இழந்தாலும் கவலைப்படேன்
நல்ல போராட்டம் போராடி முடிப்பேன்
நீதியின் கிரீடத்தை பெற்றுக்கொள்ளுவேன்
Siluvaiyil Siluvaiyil - சிலுவையில் சிலுவையில் - Lyrics
Reviewed by Christking
on
March 06, 2018
Rating:
