Kalangadhe En Maganae - கலங்காதே என் மகனே

கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன் x (2)
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு (2)
கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்
உனக்காய் உலகில் வந்தேன்
உனக்காய் ஜீவன் தந்தேன்
எந்தன் ரத்தம் சிந்தி
உன்னை வாங்கிக்கொண்டேன் x (2)
என் பிரியமே நீ என்னுடையவன்
எனக்கெல்லாம் மகனே நீயே
என் பிரியமே நீ என்னுடையவள்
எனக்கெல்லாம் மகளே நீயே
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு (2)
கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்
உனக்காய் யாவும் செய்வேன்
உன்னோடென்றும் வருவேன்
எந்தன் தோளில் ஏந்தி
உன்னை சுமந்து செல்வேன்
என் சிறகுகளால் உன்னை
மூடிக்கொண்டேன்
என் வலக்கரத்தால் உன்னை
அணைத்துக்கொண்டேன் x(2)
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு (2)
கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன் x (2)
Kalangadhe En Maganae - கலங்காதே என் மகனே
Reviewed by Christking
on
March 25, 2018
Rating:
