Ertrukondarulumae Deva - ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ

ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கை
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன் ஸ்வாமி
குறைவுண்டு இதிலே அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன் ஸ்வாமி
மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி
சிறுமைப்பட் டடியேன் கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புதுபெலன் ஊற்றிடும் ஸ்வாமி
விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்
Ertrukondarulumae Deva - ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ
Reviewed by Christking
on
March 13, 2018
Rating:
