Enna Pakiyam - என்ன பாக்கியம் எவர்க்குண்டு

என்ன பாக்கியம் எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்
விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும்
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்
வானகந் தானோ அல்லதிது வையகந் தானோ
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
போதும் இவ்வாழ்வு பரகதி போவேன் இப்போது
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
சாமியைக் கண்டேன் மகானந்தம் சாலவுங்கொண்டேன்
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
அன்னமும் நீயே கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே
மின்னுறு மேகத் திருக்கை துறந்தையோ
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ
Enna Pakiyam - என்ன பாக்கியம் எவர்க்குண்டு
Reviewed by Christking
on
March 07, 2018
Rating:
