En Yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை

என் இயேசுவே என் நம்பிக்கை
எனக்கெல்லாம் நீர் ஐயா
உம்மை மறவேனே உருவாக்கினீரே
எனக்கெல்லாம் நீர் ஐயா
துன்பம் வந்தாலும் துயரம் சூழ்ந்தாலும்
கண்ணீரின் பாதையில் நடந்து சென்றாலும் - உம்
வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
கண்ணீரின் பாதையில் நடந்தாலும் பயமில்லை
கலங்கித் தவித்தாலும் கைவிடப்பட்டாலும்
கவலையால் உள்ளமே உருகிப்போனாலும் - உம்
வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகைவரை உம்மைப் பற்றிடுவேன்
கவலையால் உள்ளமே உருகினாலும் கலங்கிடேன்
வியாதி வந்தாலும் பாரம் மிகுந்தாலும்
வேதனையால் உள்ளமே உடைந்து போனாலும் - உம்
வாக்கை மட்டும் நான் நம்பிடுவேன்
உம் வருகை வரை உம்மைப் பற்றிடுவேன்
வேதனை உள்ளத்தை உடைத்தாலும் அழுதிடேன்
En Yesuve En Nambikkai - என் இயேசுவே என் நம்பிக்கை
Reviewed by Christking
on
March 07, 2018
Rating:
