Eesane kristhesu - ஈசனே கிறிஸ்தேசு நாயகனே - Lyrics

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்
இராஜ்யம் வருவதாக
ஈசனே கிறிஸ்தேசு நாயகனே
பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக
பாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுக
நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக
நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக
நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்
வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்
எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்
பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம்
அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய
அத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய
மெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரிய
வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய
Eesane kristhesu - ஈசனே கிறிஸ்தேசு நாயகனே - Lyrics
Reviewed by Christking
on
March 07, 2018
Rating:
