Devanae Ummai Naan

Album : | Artist :
தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்
உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
இரத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர்
உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
காணக்கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர்
உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா
மாறிடும் உலகில் மாறாதவர் நீரே
உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம்
Devanae Ummai Naan
Reviewed by Christking
on
March 02, 2018
Rating:
