Devan Nam Adaikkalamum

Album : | Artist :
தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
ஆபத்துக் காலத்திலே
அனுகூலம் துணையே
பர்வதம் அதிர்ந்தாலும் இந்த
பூமி நிலை மாறினாலும்
ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
பயப்படோம் நாமே
ஓடும் ஓர் நதியுண்டே அதின்
நடுவில் நம் தேவனுண்டே
பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும்
தேவன் அதின் சகாயம்
ஜாதிகள் ராஜ்ஜியங்கள் மிக
வேகம் கொந்தளிக்கின்றதே
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்க
தேவன் நம் அடைக்கலமே
பூமியின் பாழ்க்கடிப்பை பாரும்
கர்த்தர் நடப்பிக்கின்றாரே
யுத்தம் நிறுத்தி வில்லை டித்தார்
கர்த்தரின் செயலிதுவே
அமர்ந்திருந்து நானே தேவன்
என்று அறிவீர் என்றாரே
ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
கர்த்தர் உயர்ந்திருப்பார்
Devan Nam Adaikkalamum
Reviewed by Christking
on
March 02, 2018
Rating:
