Deva Aasirvatham Berukiduthe

Album : | Artist :
தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க
எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரோளி வீசிடுதே
நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்
குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்
தெரிந்த்டுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்
பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம்
Deva Aasirvatham Berukiduthe
Reviewed by Christking
on
March 02, 2018
Rating:
